தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20!

0
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20!
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20!
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20!

தமிழகத்தில் கொரோனா வருகையால், அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது நிலை சீராகி வருவதால் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள சமூகப்பணியாளர்‌ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள சமூக சேவகர் (Social Worker) என்ற வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழக அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த அறிவிப்பின் படி, சமூகப்பணியாளர்‌ பணியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது. 40 வயதிற்குள்‌ இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்‌ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.14,000 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20 ஆகும். இந்த பணியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இதையடுத்து சமூக சேவகர் பணிக்கு தகுதியானவர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ramanathapuram.nic.in என்ற தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு Police Constable ஆகணுமா? இத பண்ணுங்க

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்தில்‌ அனைத்து சான்றுகளின்‌ நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌, நீதிமன்றம்‌ தென்புறம், இராமநாதபுரம்‌ -623 503 என்ற முகவரிக்கு 20-08-2022 -க்குள்‌ கிடைக்குமாறு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. அதாவது 20-08-2022, 05.45 பிற்பகலுக்கு பிறகு பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here