சென்னையில் மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னையில் மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,696 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் தாய்மார்கள் நகைகளில் முதலீடு செய்வதை தான் சிறந்த திட்டம் எனவும், எதிர்காலத்திற்கு பாதுகாப்பானது எனவும் எண்ணுகின்றனர். வாங்கும் சம்பளத்தில் பாதியை நகை வாங்கி சேமித்து வைத்து கொள்கின்றனர். வங்கிகளில் பணமாய் சேமிப்பதை விட நகையில் முதலீடு செய்வது நல்ல லாபகரமான திட்டமாக இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் வெளியீடு!

இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.40,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன் மற்றும் ரஷ்ய போராலும் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் பாதிப்படைந்துள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,696 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 62.00 ரூபாய்க்கு விற்பனையானது.

Exams Daily Mobile App Download

நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.38,704 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.4,838க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.61.50-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here