சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (மே.20) காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வடைந்துள்ளது. இந்த தொடர் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விலை உயர்வு

சமீப காலமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது சமீப நாட்களில் உயர்வில் மட்டுமே இருக்கிறது. இதனால், திருமண காரியங்கள், சுப முகூர்த்த தினங்களில் தங்கம் வாங்குபவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய விலையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 வரை உயர்ந்து ஒரு சவரன் நகை ரூ.37,976க்கு விற்கப்பட்டது.

TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – என்னென்ன விதிமுறைகள்?

இதற்கிடையில், பணவீக்கம், கொரோனா பேரலைத்தொற்று பரவல், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சூழலில் மீண்டுமாக இன்றைய விற்பனையில் தங்கத்தின் விலை உயர்வை கண்டுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து 2வது நாளாக உயர்வடைந்துள்ள ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.20) சவரனுக்கு ரூ.38,288 என விற்பனையாகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், ஒரு கிராம் அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று காலை நிலவரப்படி ரூ.31 வரை அதிகரித்து ரூ.4,877 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் வரை உயர்ந்து 38,288 என விற்பனையாகிறது. இதற்கிடையில், வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 65.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!