சென்னை: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

0
சென்னை: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
சென்னை: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
சென்னை: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை அதிரடியாக உயர்ந்து ரூ.38,160 என விற்பனையாகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

இந்தியாவில் அனைத்து பெண்களுக்கும் தங்க நகைகள் என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்று. பொதுவாக பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பர். தங்கம் வாங்குவதில் மட்டும் பாரபட்சம் பாராமல் செலவு செய்வார்கள். இதனால் மார்க்கெட்டில் தங்கத்தின் மீதான வியாபாரத்திற்கு குறைவே இருக்காது என்று கூறலாம். இருந்தாலும், சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வங்கிக்கு செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! அரசின் முடிவு என்ன?

குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து தொழில்களும் கடுமையாக முடக்கப்பட்டன. ஆனால் பங்குச் சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இது மட்டும் காரணமில்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் நிமித்தமாக இந்த ஆபரணத் தங்கத்தின் விலை உச்சகட்ட உயர்வுக்கு வந்தது. இதனால், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு தங்கம் வாங்குபவர்கள் பெறும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், ஜூன் 8ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.38,160க்கு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 200- ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.68.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.68,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here