சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை அதிரடி உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!
இன்று (ஜூன் 8) காலையுடன் துவங்கி இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.80 வரை அதிரடியாக உயர்ந்து ரூ.38,160 என விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிரடி உயர்வு
இந்தியாவில் தங்க நகைகளை சேமித்து வைப்பது என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்தவொரு விசேஷ நாள் என்றாலும் அன்று தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் ஒரு முக்கிய பங்காக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அதனால் இந்திய மார்க்கெட்டில் எப்போதும் தங்கத்தின் மீதான வியாபாரத்திற்கு குறைவே இருக்காது. இருந்தாலும், சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திருநெல்வேலியில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் பின்விளைவுகளாக இந்த ஆபரணத் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது என சொல்லப்பட்டுள்ளது. இதனால், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு தங்கம் வாங்குபவர்கள் பெறும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.280 வரை குறைந்திருந்த தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.38,080 வரை விற்பனையாகி அதிர்ச்சி அளித்திருந்தது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து நேற்று (ஜூன் 7) ஒரே நாளில் தங்கங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை குறைந்து ரூ.38,080க்கு விற்பனையாது. இந்த நிலையில் இன்று (ஜூன் 8) காலை துவங்கி இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.38,160க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,770 என விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.68.00 என விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.