சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறி, இறங்கியும் வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி:

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அதிகமான மக்கள் சேமிப்பில் கவனம் செலுத்தி தங்கத்தில் முதலீடு செய்தனர். கடந்த ஆண்டு அரசின் முயற்சியால் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் தங்கம் விலை ஏறி, இறங்கியும் வரும் நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.272 உயர்ந்துள்ளது.

TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

இதை தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் திருமணங்கள் பெரிதும் நடைபெறாததால் நகைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தளர்வுகள் நீக்கப்பட்டு திருமணங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு நாளில் தங்கம் விலை இரண்டு முறை மாறுபடுகிறது. அதுவும் இந்த ஆண்டு பரவி வரும் ஓமைக்ரான் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்றவற்றின் விளைவாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – சத்துணவு வழங்க அரசாணை வெளியீடு!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.36,376 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ. 272 உயர்ந்து ரூ.36,648 விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,581 க்கு விற்பனையாகிறது. தற்போது தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.68.80 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,800.00 விற்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!