சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

பெண்களின் படிப்பு, திருமணம் ஆகிய தேவைகளுக்கு முக்கிய முதலீடாக தங்க நகைகள் உள்ளன. இந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. எனவே இந்த நகைக்குறைவு தகவல் நகைப்பிரியர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி:

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்த வகையில் தமிழகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு அளிக்கப்பட்டு அனைத்து தொழில்களும் மூடப்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்து வந்திருந்தவர்கள் எந்த ஒரு சரிவையும் சந்திக்கவில்லை.

மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? தொடரும் கோரிக்கை!

இந்த அடிப்படையில் கொரோனா பாதிப்பு நிலைமை சரியாகி வரும் இந்த நேரத்தில், மீண்டும் தங்க நகைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டாலும், மக்களால் தங்கநகைகள் வாங்குவது குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புத்தாண்டு முதலே ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து தான் வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – அரசின் முடிவு என்ன?

இருப்பினும் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து தங்கத்திற்கு இணையாக மக்களால் வாங்கபடும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்து உள்ளது, இந்த வகையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 உயர்ந்து ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் நகைப்பிரியர்கள் அதிக தங்கநகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here