சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்கள் என அனைத்திலும் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் தேவையானது கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தங்க விலை இந்த வாரம் முழுவதும் சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய தங்க விலை நேற்றை விட குறைந்து உள்ளது.

குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை:

தமிழகத்தில் கொரோனா எழுச்சியால் பொதுமக்கள் அதிகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் எதிர்கால தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும். நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. அண்மைக்காலமாக தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்க விலை நகை பிரியர்களுக்கு ஜாக்பாட் அளிக்கும் வகையில் நேற்றைய விலையை விட இன்று விலை சரிந்துள்ளது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,879 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,032 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,696க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,837க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.68.80க்கும் விற்பனை ஆகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!