சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

ஆபரணத் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 64 தடாலடியாக குறைந்து ரூ.39,032-க்கு விற்பனை ஆகிறது.

குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை:

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்கள் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் தேவையானது இந்த கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதோடு மக்களும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், எவ்வளவு தான் விலை அதிகரித்தாலும், தங்கம் வாங்கும் அளவை குறைத்தார்களே தவிர, அதனை வாங்காமல் நிறுத்தவில்லை. ஆக தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், குறைந்திருந்தாலும் மக்களால் தவிர்க்க முடியாத ஆபரணமாகி விட்டது. அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு. தங்கம் விலையானது கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நிபுணர்களின் கணிப்பானது சற்றே ஆறுதல் தரும் விதமாக கணிப்புகளை கொடுக்க தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த நடுத்தர மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும். ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. அண்மைக்காலமாக தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்க விலை நகைப் பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,879 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!