சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. விலை குறைந்ததால் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டும் குறைந்து கொண்டுமாய் இருக்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்கம் வாங்குவதில் தான் குடும்பத் தலைவிகள் மற்றும் நகை பிரியர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் மக்கள் புத்திசாலித்தனமான முதலீடாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா கால கட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பவுனுக்கு பல ஆயிரங்கள் அதிகரித்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.
மதுரை சித்திரை திருவிழா 2022 – மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த முக்கிய அறிவிப்பு!
நேற்றைய விலையை விட இன்று தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38,600 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது மற்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 4,825 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 71.50 ரூபாய்க்கு விற்பனையானது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,500 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.4,820-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.70.30-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.71,300-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.