சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய விற்பனை!

இந்த வாரத்தில் தொடர்ந்து 3 ஆவது முறையாக குறைந்துள்ள ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது மீண்டுமாக சவரனுக்கு ரூ.128 வரை குறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்.

ஆபரணத்தங்கம் விற்பனை

சென்னையில் தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த வார துவக்கம் முதலே கொஞ்சம், கொஞ்சமாக சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றும் வீழ்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த 4 நாட்கள் விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.500 க்கும் மேல் குறைவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் ஆர்வமுடன் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள் – காவல்துறை எச்சரிக்கை!

அதன் படி நேற்று (செப்டம்பர் 8) ஒரு நாள் மட்டும் காலை, மாலை என 2 நேரங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்ப்பாராத அளவு சரிந்துள்ளது. அதாவது காலை விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த நிலையில், மாலை விற்பனையில் மீண்டுமாக ரூ.176 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – TANUVAS அறிவிப்பு!

இதை தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 9) விற்பனையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் நகை ரூ.35,472க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,434க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் வரை குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.68.30க்கு விற்பனையாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!