சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – இன்றைய விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – இன்றைய விற்பனை!

சென்னையில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் (செப்டம்பர் 8) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ள தங்கத்தின் விலை ரூ.35,616க்கு விற்பனையாகி வருகிறது.

இன்றைய விற்பனை

ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சில நாட்களில் தங்கத்தின் விலை சரிவடைந்தால், அதை தொடர்ந்து வரும் அடுத்த நாட்களில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு அடைவது வழக்கமான ஒன்று தான். எப்படி இருந்தாலும் தங்கநகை மீது இருக்கும் பிரியத்தினால் வாடிக்கையாளர்கள் பலரும் நகைகளை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒன்றிய அரசின் CAA சட்டம் ரத்து – தமிழக சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம்!

இதற்கிடையில் நகைகளை வாங்க செல்லும் முன்னதாக அன்றைய விற்பனை தெரிந்து கொள்வது நகை ஆர்வலர்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும். அதன் படி இந்த வார துவக்கத்தில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் நேற்றைய (செப்டம்பர் 7) விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.136 என குறைந்து ரூ.35,832க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் துவங்கிய 3வது அலை? ஒரே நாளில் 37,875 பேருக்கு கொரோனா! 369 பேர் பலி!

அதே போல இன்றைய (செப்டம்பர் 8) விற்பனை விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் நகை ரூ.35,616க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,452க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் சில்லறை விற்பனையில் கிராமுக்கு 20 காசுகள் மட்டும் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!