சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரிப்பு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரிப்பு – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நேற்று (செப்டம்பர் 21) துவங்கி ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சவரனுக்கு ரூ.500 வரை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,000க்கும் கீழே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை திடீர் உயர்வை கண்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக படிப்படியாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.2000 வரை சரிவை கண்டது. இந்த அதிரடி விலை குறைவால் பலரும் ஆபரணத் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

செப்.25 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இப்படி தொடர்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று (செப்டம்பர் 21) முதல் அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு நாள் விற்பனையில் மட்டும் காலை, மாலை என இரு நேரங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை உயர்வடைந்தது. அதே நிலை இன்றைய விற்பனையிலும் நீடித்துள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு புதிய விதிமுறைகள் – அரசு வெளியீடு!

அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 22) நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 வரை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.10க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!