சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 சரிவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 சரிவு – இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை 8 ரூபாய் குறைந்து ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்க விலை நிலவரம்:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டதால் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்க நகை விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்தது. ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் உள்ளிட்டவற்றின் மதிப்பு குறைந்த நிலையில் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது திரும்பியது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருப்பதால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்தை அடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 47,092 பேருக்கு தொற்று, 509 பேர் உயிரிழப்பு!

ஊரடங்கு காலத்தில் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களுக்கும் தங்கத்தின் விலை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் பொருளாதாரம் மீண்டுள்ளது. எனவே தங்கத்தின் விலையும் படிப்படியாக குறைந்து ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,451 க்கும், ஒரு சவரன் 8 ரூபாய் குறைந்து ரூ.35,608 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.60 க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.68,600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here