சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய விற்பனை!

சென்னையில் கடந்த வாரம் முதல் வீழ்ச்சியடைந்து வரும் ஆபரணதங்கத்தின் விலை வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இன்றும் (செப்டம்பர் 13) கூட தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.

தங்க நகை விற்பனை

வழக்கமாக தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் காலகட்டங்களில் அதன் விற்பனை படு ஜோராக நடைபெற்று வரும். அந்த வகையில் தங்கநகை விற்பனையானது கடந்த வாரத்தில் அமோகமாக இருந்தது. ஏனென்றால் கடந்த வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வார இறுதியில் மொத்தமாக சவரனுக்கு ரூ.700 வரை குறைந்து விற்பனையானது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!

அதே நிலை இந்த வாரமும் நீடித்துள்ளது. அந்த வகையில் எதிர்பாராத விதமாக தொடர்ந்து இரண்டாவது வாரமும் தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டு வருகிறது. நேற்று (செப்டம்பர் 12) ஞாயிற்று கிழமை என்பதால் கடந்த சனிக்கிழமை விலையின் படி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.35,520க்கு விற்பனையானது. ஆனால் இன்று (செப்டம்பர் 13) மீண்டுமாக தங்கநகைகளின் விற்பனை விலை சரிவுடன் துவங்கியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று – 219 பேர் உயிரிழப்பு!

அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 என குறைவை கண்டுள்ளது. அதன் மூலம் ஒரு சவரன் நகை ரூ.35,496க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,437 க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் இன்று சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.50 என விற்பனையாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!