தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் – ரூ.25,000 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

0
தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் - ரூ.25,000 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!
தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் - ரூ.25,000 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!
தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் – ரூ.25,000 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

தமிழக வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை

தமிழக வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள 8 காலிப்பணியிடங்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) பதவிக்கு 1 காலிப்பணியிடமும், Project Assistant – Health Monitoring பதவிக்கு 1 காலிப்பணியிடமும், Project Assistant – STR பதவிக்கு 2 காலிபணியிடமும், Project Assistant – SDMA பணிக்கு 2 காலிபணியிடமும், Project Assistant – Assessment & Identification பதவிக்கு 2 காலிபணியிடமும் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதலில், Project Assistant – DNA, Project Assistant – STR ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc, M.Tech in BioTechnology, Molecular Biology, Genetics, Genetic Engineering ஆகியவற்றில் ஏதோவொரு பட்டபடிப்புடன் ஒரு வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, Project Assistant – Health Monitoring, Project Assistant – SDMA, Project Assistant – Assessment & Identification ஆகிய பணியிடங்களுக்கு M.Sc in Wildlife Biologyஅல்லது Zoologyல் பட்டபடிப்புடன் ஒரு வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Project Assistant – DNA , Project Assistant – Health Monitoring ஆகிய பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20, 000 சம்பளம் வழங்கப்படும் எனவும், Project Assistant – STR, Project Assistant – SDMA, Project Assistant – Assessment & Identification ஆகிய பணியிடங்களுக்கு ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பு 28 எனவும், SC, ST, BC, MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும், இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வின் அடிப்படையில் தான் பணியிடம் நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து Additional Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஜூலை 22 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!