தமிழ்நாடு வனத்துறையில் 25,000 ரூபாய் வரை சம்பளம் – தகுதி & விண்ணப்பிக்கும் முறை இதோ!

0
தமிழ்நாடு வனத்துறையில் 25,000 ரூபாய் வரை சம்பளம் - தகுதி & விண்ணப்பிக்கும் முறை இதோ!
தமிழ்நாடு வனத்துறையில் 25,000 ரூபாய் வரை சம்பளம் - தகுதி & விண்ணப்பிக்கும் முறை இதோ!
தமிழ்நாடு வனத்துறையில் 25,000 ரூபாய் வரை சம்பளம் – தகுதி & விண்ணப்பிக்கும் முறை இதோ!

தமிழ்நாடு வனத்துறையில் உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தமாக 8 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி, சம்பளம் என்பது குறித்தான அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை:

தமிழ்நாடு வனத்துறை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு பாதுகாப்பு மேம்பட்ட நிறுவனத்தில் இருக்கும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தமாக 8 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) பணிக்கு 1 காலிப் பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – Health Monitoring) பணிக்கு 1 காலிப்பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – STR) பணிக்கு 2 காலிப் பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – SDMA) பணிக்கு 2 காலிப்பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – Assessment & Identification) பணிக்கு 2 காலிப்பணியிடமும் என மொத்தமாக 8 காலி பணியிடங்கள் உள்ளன.

திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் M.Sc, M.Tech in BioTechnology, Molecular Biology, Genetics, Genetic Engineering இவற்றில் ஏதோவொரு பட்டபடிப்புடன் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 28 க்கும் குறைவாக இருக்க வேண்டும். SC, ST, BC, MBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 வயது தளர்வு வழங்கப்படுகிறது. மேலும், இதில் தேர்வாகும் விண்ணதாரர்களுக்கு ரூ.20,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, திட்ட உதவியாளர் (Project Assistant – Health Monitoring) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Sc in Wildlife Biology, Zoology ல் பட்டபடிப்புடன் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பு 28 எனவும், SC, ST, BC, MBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 வயது தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திட்ட உதவியாளர் (Project Assistant – STR) பணிக்கு M.Sc, M.Tech in BioTechnology, Molecular Biology, Genetics, Genetic Engineering பட்டப்படிப்புடன் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கும் வயது வரம்பு 28 எனவும், SC, ST, BC, MBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 வயது தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாத சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திட்ட உதவியாளர் (Project Assistant – SDMA) பணிக்கு M.Sc in Wildlife Biology, Zoology பட்டப்படிப்புடன் ஒரு வருடம் முன் அனுபவமும், வயது வரம்பு 28 எனவும், SC, ST, BC, MBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 வயது தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Project Assistant – SDMA பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திட்ட உதவியாளர் (Project Assistant – Assessment & Identification) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Sc in Wildlife Biology, Zoologyல் பட்டபடிப்புடன் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பு 28 எனவும், SC, ST, BC, MBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 வயது தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாத சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசம் ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்கள் அனைத்திற்கும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தான் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், தகுதியும் விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்பு, அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து Additional Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048 என்கிற முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!