தமிழக நிதித்துறை அமைச்சர் & பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு – இதற்காக தான்!

0
தமிழக நிதித்துறை அமைச்சர் & பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு - இதற்காக தான்!
தமிழக நிதித்துறை அமைச்சர் & பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு - இதற்காக தான்!
தமிழக நிதித்துறை அமைச்சர் & பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு – இதற்காக தான்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளிகளுக்கு தேவையான நிதி குறித்து நிதித்துறை அமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செம்மையாக செயற்படுத்தி வருகிறது. அத்துடன் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற பல்வேறு வகையான திட்டத்தை தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வருகிற 29ம் தேதி அல்லது 30ம் தேதி அன்று சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது இந்த சந்திப்பு கூட்டத்திற்கான கூட்டப்பொருள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மாதிரி பள்ளிகளில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் வழங்குவது குறித்தும் மடிக்கணினி வழங்குவது குறித்தும் சந்திப்பில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29ல் ‘இந்த’ ஏரியாக்களில் Current இருக்காது – முழு List இதோ!

அத்துடன் தமிழகத்தில் பழுதடைந்த/ இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு பதிலாக புதிதாக 2500 கட்டிடங்கள் கட்டுதல், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், மாதிரி பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களை நிரந்தர பணியாளராக மாற்றுதல், தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் தமிழ்நாடு பாட நூல் கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்டவை குறித்து இரு அமைச்சர்களும் கலந்தாலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!