தமிழகத்தில் நாளை ஜூன் 14ம் தேதி மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை ஜூன் 14ம் தேதி மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் நாங்குநேரி பகுதிகளில் மின் வாரிய பணிகள் நிமித்தம் காரணமாக நாளை ஜூன் 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்திருக்கிறார்.

மின்தடை

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி பார்த்து வருகின்றனர். அவ்வப்போது பெரும்பாலான இடங்களில் மின்னணு சாதனங்களில் கோளாறு, மின்னணு துண்டிப்பு மற்றும் மின்கசிவு போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் எதிர்பாராத விதமாக விபத்துகளும் நடந்துவிடுகிறது. இந்த மின்கசிவு, மின்னணு துண்டிப்பு ஆகியவற்றை சரி செய்ய தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ஒவ்வொரு மாதமும் மின் நிலையங்களின் கம்பிகளில் ஏதாவது பாதிப்பு உள்ளதா, வயர்கள் உரசி தீ விபத்து உள்ளாகுமா மற்றும் மரக் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் மின் தடை செய்யப்படுகிறது. எந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறார்களாலோ அந்த பகுதியில் மின் பொறியாளர் அறிவிப்பை வெளியிடுவார். வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை – புதிய உத்தரவு வெளியீடு!

அதன்படி, மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளான பணகுடி, ராஜாக்கமங்கலம், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், கோவனேரி, ஏ.எம்.ஆர்.எல், காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை. பொருளாதார மண்டலம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு நாளை (ஜூன் 14) ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here