தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் – நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!

0
தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் - நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!
தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் - நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!
தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் – நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து உள்ளது. இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரம்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் 26ம் தேதி அறிவிப்பு வெளியானது. தேர்தல் தினத்தன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பிப்.18-ஆம் தேதி தோ்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களைத் தவிர பிற ஆசிரியா்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வரும் 19ம் தேதி தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்? கல்வித்தகுதி இதுதான்!

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் மற்ற அனைத்து கட்சியினரும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டனர். தோ்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பிரசாரம் முடிந்த நிலையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளா்கள் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here