தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய ஆபத்து! அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இனி வரும் 2 வாரங்களுக்கு பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் முடிவடையாத நிலையில் அடுத்த பேரிடராக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ் ஆகும். இது டெல்டாவை போல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்.
மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா மூன்றாம் அலை படிப்படியாக குறைய தொடங்கியது. அதானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இன்னும் 2 வாரங்களுக்கு பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நவாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் 10 – 12 சதவீதம் வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது அதனால் தான் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – குரூப் ‘சி’ காலிப்பணியிடங்கள்!
இதுவரை தமிழகத்தில் 77 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு சென்னையில் 1.80 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய கூடாது பிற மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது என்பது சவாலாக இருக்கும் பட்சத்தில் தனி இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கியுள்ளார்.