தமிழகத்தில் ஜூலை 19 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 19 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்‌ தொற்று நிலையைக்‌ கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல்‌ 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

  • மாநிலங்களுக்கிடையே தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்‌ தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்‌
  • அனைத்து மதுக்கூடங்கள்‌
  • நீச்சல்‌ குளங்கள்‌
  • பொது மக்கள்‌ கலந்து கொள்ளும்‌ சமுதாயம்‌, அரசியல்‌ சார்ந்த கூட்டங்கள்‌
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்‌
  • பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌
  • உயிரியல்‌ பூங்காக்கள்‌
  • நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்தும்‌ விதமாக திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌.
  • இறுதிச்‌ சடங்குகளில்‌, 20 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌. நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர, அனைத்து பகுதிகளிலும்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ 12- 7-2021 முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலும்‌, பின்வரும்‌ கூடுதல்‌ செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படுகின்றன.

  • புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
  • ஒன்றிய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்‌ தேர்வுகள்‌ அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை தேர்வு நடத்தும்‌ அமைப்புகள்‌ முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம்‌ தெரிவிக்க வேண்டும்‌.
  • உணவகங்கள்‌, தேநீர்‌ கடைகள்‌, அடுமனைகள்‌, நடைபாதைக்‌கடைகள்‌, இனிப்பு, காரவகை பண்டங்கள்‌ விற்பனை கடைகள்‌ ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன்‌ இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!