தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – பிப்.25 முதல்..!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - பிப்.25 முதல்..!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - பிப்.25 முதல்..!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – பிப்.25 முதல்..!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களது நகைகள் பிப்ரவரி மாத இறுதி திரும்ப வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் தற்போது முடிவடைந்துள்ளதால் விரைவில் நகைகள் கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகைக்கடன்:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவுள்ள தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் விதமாக ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை இதோ!

இதனையடுத்து பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், நகை கடனை முழுமையாக செலுத்தியவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நகைக்கடன் வைத்தவர்களில்13 லட்சம் பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் உள்ளனர். நகைக்கடன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில் நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாத இறுதி திரும்ப வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.தற்போது நகர்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!