தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் மோசடி:

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவது போன்றவை அடங்கும். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஏதேனும் மாவட்டத்தில் முறைகேடு ஏற்பட்டால் ஒரு மாவட்ட அதிகாரி மற்றொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

இவ்வாறு தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் முறைகேடு நடந்ததாக தெரிய வந்தது. கீரனூர் கூட்டுறவு வங்கியில் 10000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் கணக்கு வைத்துள்ளன. அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் நீலகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் ரூ.1.8 கோடி ரூபாய் நகை இல்லாமல் கடன் வழங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மூலமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் அளிக்க முடிவு!

இதையடுத்து இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வங்கியில் பணி புரிந்த நகை மதிப்பீட்டாளர் கனகவேலு என்பவரும் இதற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் பணி நீக்கம் செய்துள்ளது. அத்துடன் இவர்கள் மூலமாக வழங்கப்பட்ட 102 நகைக்கடன்களும் வங்கி ஊழியர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டனவா என்ற ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நகைக்கடன் மோசடி மீண்டும் ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!