தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.8894 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு எனப்படும் 21 பொருள்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

அதன்படி வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பு காரணமாக அரசிற்கு கூடுதலாக ரூ.8 ஆயிரத்து 724 கோடி செலவாகும். தற்போது கூடுதல் சிறப்பாக அரசு துறைகளில் உள்ள ஊழியர்களில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் – முக்கிய அம்சங்கள்!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.8894 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1000 மற்றும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக ரூபாய் 169.56 கோடி அளவிற்கு செலவு ஏற்படும் என கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here