தமிழகத்தில் 1.06 கோடி பெண்களுக்கு ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை – முதல்வர் வாழ்த்து!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 15ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற்றுள்ளவர்களுக்கு முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. அதாவது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 15ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் நிபந்தனைகளின் அடிப்படையில் சுமார் 1.6 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
ஏழை மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள்.. இறுதி கட்ட பணிகள் தீவிரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதில் உரிமை தொகையைப் பெற்றுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது உரிமைத் தொகை அல்ல உங்களுக்கான உழைப்பு தொகை என்றும் கூறியுள்ளார். பெண்களாகிய உங்களின் உழைப்புக்கு அரசு தரும் அங்கீகாரமே இந்த உரிமை தொகை. பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவற்றை பெற்று தந்த மகளிர் முன்னேற்ற மாண்பாளர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.