தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. மேலும், மறுகூட்டல் மற்றும் விடைத்தாளின் நகலை பெறுவது குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு இந்த மாதத்தின் துவக்கத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில், துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பிற்பகல் 3.00 மணி முதல் துணை தேர்வு முடிவினை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை தேர்வு முடிவில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் அல்லது விடைத்தாளின் நகலை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுகூட்டல் அல்லது விடைத்தாளின் நகலை பெற விரும்புபவர்கள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் SC, ST மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும், விடைத்தாள் நகலினை பெற விரும்புபவர்கள் ஒரு பாடத்துக்கு 275 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஒரு பாடத்துக்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், www.dge.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்தில் இருந்தே விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!