தமிழக 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைக்கு பின் தேர்தல் – தகவல் வெளியீடு!
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்:
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மாநில வாரியாக பல கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த உத்தேச அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் டிசம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பொதுத்தேர்வு பணி அட்டவணை, உள்ளூர் விடுமுறைகள், பண்டிகை காலம், தொகுதிவாரியான முக்கிய நிகழ்வுகள், வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு இயந்திரம், உபகரணங்கள் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் ஆனது 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை அடிப்படையாகக் கொண்டுதான் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை இறுதிச் செய்யப்படும் என்றும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.