முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் – குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

0
முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் - குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!
முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் - குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!
முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் – குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (18.07.2021) டெல்லி செல்ல உள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளார்.

முதல்வர் டெல்லி பயணம்:

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி அணையின் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டு தோறும் பயிர் விளைச்சலுக்கு காவிரி அணை திறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு கூறுகிறது. இது குறித்து கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் அம்மாநில அரசு கோரிக்கையை ஏற்கவில்லை.

Jio & Airtel ன் ரூ.600 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் விவரங்கள் இதோ!

இது தொடர்பாக கருத்து பெற தமிழகத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர். ஏற்கனவே தமிழகத்தில் விவசாயிகள் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் மத்திய அரசு புதிய வேளாண் திட்டங்களையும் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரியில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படக்கூடும்.

TN Job “FB  Group” Join Now

அதனால் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். மேகதாது அணை கட்டுமான அனுமதி வேண்டி கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (18.07.2021) டெல்லி சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் குடியரசுத் தலைவருடனான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!