தமிழகத்தில் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு கையேடு – முதல்வர் வெளியீடு!

0
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு கையேடு - முதல்வர் வெளியீடு!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு கையேடு - முதல்வர் வெளியீடு!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு கையேடு – முதல்வர் வெளியீடு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்து அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

கையேடு:

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளான இந்திய தேசிய ஆணைய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலை என பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ன தான் சாலை பராமரிப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டாலும் சாலை விபத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. மேலும், சாலை குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பொதுமக்களுக்கு சரியாக தெரியாத காரணத்தினாலும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – முழு விபரம் இதோ!

இந்நிலையில், தமிழகத்தை விபத்துகளற்ற தூய்மையான சாலையாக மாற்ற பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில்லா பயணத்திற்கு பயணிகள் கட்டாயமாக போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பயணம் செய்யும் போது கவனத்தை சிதறடிக்கும் படியாக பாட்டு கேட்டபடி வண்டியோட்டுவது, போன் பேசியபடி வண்டியோட்டுவது போன்றவற்றை முதலில் தவிர்க்க வேண்டும். மேலும், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை கட்டாயமாக பயணிகள் தவிர்த்துவிட வேண்டும்.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் விபத்தினை குறைக்கும் பொருட்டு நெடுஞ்சாலை பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை கையேடாக தயாரித்து அந்த கையேட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த கையேட்டில் சாலை விபத்திற்கு உள்ளானவர்களின் புள்ளி விவரங்கள், விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள், சாலை விதிகள், சாலைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கைக் குறியீடுகள் மற்றும் முதலுதவி சேவை என அனைத்து விதிமுறைகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!