புதிய டைடல் பூங்காக்கள் முதல் பொங்கல் வேட்டி, சேலை திட்டம் வரை – பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

0
புதிய டைடல் பூங்காக்கள் முதல் பொங்கல் வேட்டி, சேலை திட்டம் வரை - பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
புதிய டைடல் பூங்காக்கள் முதல் பொங்கல் வேட்டி, சேலை திட்டம் வரை - பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
புதிய டைடல் பூங்காக்கள் முதல் பொங்கல் வேட்டி, சேலை திட்டம் வரை – பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்துள்ளார். இதுவே திமுக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். இதில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தின் தொழிற்வளர்ச்சியினை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

தற்போது தமிழகம் வணிகம் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது. அதை முதல் 3 இடத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1000 கோடி செலவில் அறைகலன் பூங்கா அமைக்கப்படுவதாகவும் அதில் 3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின்வாகனப் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடியில் 60 எம்எல்டி அளவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொழில் துறையினருக்காக செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி? விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!

சென்னை நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும். மேலும் நந்தம்பாக்கம் நிதி நுட்ப நகரத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். கோவையில் 500 ஏக்கரில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா ரூ.225 கோடி செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் ரூ.3500 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களான திருவண்ணாமலை, விருதுநகர் போன்ற பகுதிகளில் புதிய சிப்காட் அமைக்கப்படும். சிப்காட் தொழில் பூங்காக்களில் 4000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய சுரங்க கொள்கை உருவாக்கப்படும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 6 கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதைபடிவங்கள் புதைபடிவ பூங்கா அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.490 கோடி பொங்கல் பண்டிகை இலவச வேட்டி – சேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here