தமிழக வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

0
தமிழக வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
தமிழக வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
தமிழக வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த விடுமுறை பட்டியலின் படி மொத்தமாக ஜூலை மாதத்தில் மட்டுமே 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழக வங்கிகளுக்கு மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வங்கி விடுமுறை:

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், இந்த வங்கிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு அனைத்து ஞாயற்றுக்கிழமைகளும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் வார இறுதி நாட்களையும் சேர்த்து ஜூலை மாதத்தில் மட்டுமே 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதாவது, எந்த மாநிலத்தில் அந்த பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்க்கலாம்.

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை தினங்களை பார்க்கும் போது இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை இருக்கிறது. வேறு சிறப்பான எந்த பண்டிகை விடுமுறையும் ஜூலை மாதத்தில் கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த விடுமுறை நாட்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும், வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!