தமிழக 16வது சட்டசபை கூட்டத்தொடர் – 24ம் தேதி வரை நடத்த முடிவு!!
தமிழகத்தில் 16வது சட்டசபை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில் கூட்டத்தொடர் வருகிற 24ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர்:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அரசு அமைந்த பின்பு, முதல் முறையாக 16 வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரை மூலம் தொடங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள் நீட் ரத்து செய்ய முன்வடிவு, 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு, 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமல் என பல்வேறு அறிக்கைகளை தெரிவித்தார்.
உணவகங்கள், மால்கள் 50% வாடிக்கையாளர்களுடன் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக அலுவல் ஆய்வு கூட்டம் அவை தலைவர் அப்பாவு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
TN Job “FB
Group” Join Now
24ம் தேதி அன்று ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் உரையாற்றுகிறார். இதன் பின் பேரவை உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளனர். இது முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் கேள்வி நேரம் கிடையாது என்று அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். உறுப்பினர்களிடம் இருந்து கேள்விகள் பெறப்பட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் பெற கால தாமதம் ஏற்படும் என்பதால் கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என்று தெரிவித்தார்.