பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒருவர் கூட 600/600 மதிப்பெண்கள் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!

0
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒருவர் கூட 600/600 மதிப்பெண்கள் இல்லை - அமைச்சர் அறிவிப்பு!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒருவர் கூட 600/600 மதிப்பெண்கள் இல்லை - அமைச்சர் அறிவிப்பு!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒருவர் கூட 600/600 மதிப்பெண்கள் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று காலை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு யாரும் 600/600 மதிப்பெண் எடுக்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு மதிப்பெண்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

12 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் காலை 11 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள http://tnresults.nic.inhttp://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.inhttp://dge.tn.gov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களது பள்ளியில் வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண்கள் குறுந்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்ணில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் குழப்பங்களை தடுக்க இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் 100 சதவிகித தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டாலும் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 1,656 மாணவர்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களும், தனித்தேர்வர்களும் தேர்ச்சி அடையாதவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த ஆண்டு 600/600 மதிப்பெண் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண்ணும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண்ணும், அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண்ணும், கலைப்பிரிவில் 35 மாணவர்கள் 551-600 மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!