தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை மிஞ்சிய மாணவிகள் – வெளியான தகவல்!

0
தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை மிஞ்சிய மாணவிகள் - வெளியான தகவல்!
தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை மிஞ்சிய மாணவிகள் - வெளியான தகவல்!
தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை மிஞ்சிய மாணவிகள் – வெளியான தகவல்!

தமிழகத்தில் இன்று ( ஜூன் 27) 11ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள், தேர்ச்சி சதவீதம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு முதல் கட்டமாக கடந்த ஜூன் 20ம் தேதி காலை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது. இணையதளம் வாயிலாகவும், பள்ளிகள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடு செய்யப்பட்டது. 11ம் வகுப்பு தேர்வு எழுதிய 8.3 லட்சம் மாணவர்களில் 7.59 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதில் தேர்வெழுதிய மாணவர்களில், 93.76 சதவீதத்தினர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அதனை தொடர்ந்து தற்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்த வருட தேர்வில் மாணவிகள் 94.99 % பேரும், மாணவர்கள் 84.86 % பேரும் தேர்வு பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி சதவீதத்தை பொறுத்த வரை பெரம்பலூர் மாவட்டம் 95.56% பெற்று முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறையின் அதிரடி உத்தரவு!

அடுத்ததாக விருதுநகர் மாவட்டம் 95.44% பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மதுரை 95.25 சதவீதத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களுக்கு  பள்ளிகள் மூலம் அவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும்  11 ம் வகுப்பு மதிப்பெண்கள் அனுப்பப்படும்.  மாவட்ட, மைய மற்றும் கிளை நுாலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!