TNPSC பொது தமிழ் – தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

0

தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

* தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.

* தமிழ் இலக்கியங்களின் நோக்கம் அறிவியலை உணர்த்துவது அன்று. வாழ்வின் விழுமிய குறிக்கோள்களை உணர்த்துவது அப்படி இருந்தும் பல அறிவியல் கருத்துகள் அதில் புதைந்துள்ளன என்றால் தமிழ்நாட்டில் “அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம்” ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

* தமிழ் இலக்கியங்களில் காணலாகும் சொற்கள், சொற்றொடர்கள் தமிழரின் அறிவியல் சிந்தனைகள் புதைந்துள்ளன.

 “அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கும்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக்

கொன்று நின்றெழிய பகரின் நூற்றொரு கோடியின்

மேற்பட விரிந்தன”

என்று பெருவெடிப்புக் கொள்கையின்படி

* இந்த பேரண்டம் விரிவடைந்து நிற்பதை திருவாசகப் பாடல் விளக்குகிறது.

* அறிவியல் கல்வியியல் மிகத் தொன்மையானது. வானியல் கல்வி.

*  “உலகு” என்ற அடிச்சொல்லிற்குச் சுற்றுதல் என்று பொருள் (உலா, உலாவுகின்றான்) இதன் அடியாகப் பிறந்தது தான் “உலகம்” என்ற தமிழ்ச் சொல்.

*  “ஞால்” என்ற அடிச் சொல்லுக்குத் “தொங்குதல்” என்று பொருள் இதன் அடியாகப் பிறந்தது தான் “ஞாலம்” என்ற தமிழ்ச்சொல்.

* உலகம், நிலம், நீர், தீ (வெப்பம்), காற்று, விண் (வெட்டவெளி) ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. நிலம், நீர் தீவளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின்.

(தொல்காப்பியம் பொருள் 635) என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

* சுற்றிவிட்டால் எந்தப் பொருளும் வட்டமாகத் தான் (உருண்டை வடிவில்) சுற்றும்.

*  உருண்டையான பொருள் சுற்றும்

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை” (குறள் 1031)

* உலகம் உருண்டை என்பதை முதன் முதலாகப் பதிவு செய்தவர் திருவள்ளுவர் ஆவார்.

* 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை மேலை நாட்டார் உலகம் தட்டையானது என்றே கருதினர்.

* 15 ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் கிராப்ஸ் என்பவர் உலகம் உருண்டை என்றார். அதனை யாரும் ஏற்கவில்லை.

* திருவள்ளுவரின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. அவர் காலத்தில் உலகம் உருண்டை என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்து மண்டிலம்.   (புறம் 30)

என்பதால் அறியலாம். (பரிப்பு – வட்டம்)

* தானே ஒளிவிடக் கூடிய ஞாயிற்றை நாள் மீன் என்றனர்.

*ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று அந்த ஒளியை விடக் கூடியவற்றைக் கோள்மீன் என்றனர்.

* திங்கள் தானாக ஒளி வீசுவது இல்லை.

*  இந்த வானியல் உண்மை திருக்குறளில் பதிவாகி உள்ளது.

*  காதலன் நிலவிடம் கூறுகின்றான்.

நிலவே என் காதலியின் முகம் போல் ஒளிவிட

உன்னால் முடியுமானால் நீயும் என்னால்

காதலிக்கப்படுவாய்” என்ற பொருளில்

மாதர் முகம் போல ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.                              (குறள் 1118)

என்று கூறுகின்றான். அதாவது என் காதலியின் முகம் தானாகப் பகலிலும் இரவிலும் ஒளிவீசக் கூடியது. அது உன்னால் முடியாது என்பதாம்.

* பூமியைப் பற்றி மட்டுமல்லாது சூரிய மண்டலத்தில் இருக்கும் சில கோள்கள் பற்றியும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

* கோள்களின் நிறம், வடிவம், அதன் இயல்பு போன்ற உண்மைகளையும் அவர்கள் அறிந்து அதற்குத்தகப் பெயர் கொடுத்துள்ளார்கள்.

* செந்நிறமாய் இருக்கும் கோள் “செவ்வாய்” ஆகும். இன்று செயற்கைக் கோள் அனுப்பிய படங்களை ஆராய்ந்த அறிவியலார் அதன் மண் செந்நிறமாக உள்ளது என்கின்றனர்.

* வெண்மை நிறம் உடைய கோள் “வெள்ளி” எனப்பட்டது. இன்று அதில் வெள்ளித் தாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* வெள்ளிக் கோள் ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே விடியல் கலையில் நன்கு தோன்றும் ஆதலால் அதற்கு “விடிவெள்ளி” என்ற பெயர் வைத்தனர்.

* புதியதாகக் கண்டறிந்த கோள் “புதன்” ஆகும். புதியதாக அறிந்ததால் இதற்கு அறிவன் என்ற பெயரும் உண்டு.

*  “வியா” என்றால் “பெரிய” “நிறைந்த” என்று பொருள். காரி என்பது கந்தகத்தைக் குறிக்கும். இன்றைய அறிவியல் அறிஞர்கள் இக்கோளில் கந்தகம் நிறைந்திருப்பதாக ஆய்ந்து கண்டுள்ளனர்.

* வரிசையாக வைத்து ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வார நாட்களை ஏற்படுத்திக் கொண்டனர். உலகத்தைச் சுற்றியுள்ள பகுதியை 30 பாகை கொண்ட 12 பகுதிகளாகப் பிரித்தனர் (30  12 ₌ 360) பாகை. இப்பன்னிரண்டையும் மாதங்கள் என்றனர்.

* சூரியன் ஒவ்வொரு முப்பது பாகைக்குள் நுழையும் தோற்றத்தை மாதப்பிறப்பு என்றனர்.

* சூரியன் மாதத்தின் நடுவில் தோன்றுவதை “நடுக்குத்து” என்றனர்.

* ஒளி சுற்று முடிந்து இரண்டாவது சுற்றுத் தோன்றுவதை வருடப்பிறப்பு என்றனர்.

* சித்திரை மாதப் பிறப்பை ஆண்டு பிறப்பாகக் கொண்டனர். இது நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

* மேலை நாட்டு மாத, ஆண்டுக் கணக்குகள் பற்பல மாற்றங்களைப் பெற்று இன்று உள்ள நிலையை அடைந்துள்ளன. இன்றும் சித்திரை முதல் நாள் என்ற தமிழ் ஆண்டுப் பிறப்பு ஏப்ரல் மாதம் 14 ம் தேதியிலேயே வருவதால் தமிழரின் ஆண்டுக் கணக்கின் தெளிவு புலப்படுகிறது.

* கேதுவை வால் நட்சத்திரம் என்றனர்.

* சிலப்பதிகாரம், மணிமேகலையில் வான்வெளிப் பயணங்கள் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது.

* சீவக சிந்தாமணியில் மயிற்பொறி விமானத்தின் செயல்பாடு கூறப்படுகிறது. பெருங்கதையில் வானூர்தியின் வடிவமும்

 “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த”

என்ற பதிற்றுப் பத்து வரிகள் கரும்பைப்

பிழிவதற்கு எந்திரம் இருந்ததைக் கூறுகிறது.

“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்ற பெருங்கதை அடியில் வரும் “எந்திரக் கிணறு” என்பது ஆழ்துளைக் கிணற்றைக் குறிப்பதாகலாம்.

* பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் வரும் டிராய் போருடன் இணைத்து நோக்கத் தக்கது.

* சங்க காலத்திலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. “கல்லணை”

* உலகத்திலேயே பழமையான அணை கல்லணை.

* சிலப்பதிகாரம் உளர்காண் காதையில் மதுரைக் கடைத் தெருவில் விற்கப்படும் பொருள்களைப் பற்றிக் கூறும்போது “நவரத்தினங்கள்” குறித்துக் கூறுகிறது.

ஒருமைத் தோற்றத்து ஐ வேறு வனப்பின்

இலங்குகதிர் விடுஉம் நலங்கெழு மணிகளும்

என்ற அடி வருகிறது.

* மாணிக்கம், வைடூரியம், நீலம், கோமேதகம் என்ற ஐந்தும் ஒளிவிடும் தன்மையால் வேறுவேறு பெயர்களைக் கொண்டுள்ளன.

* முத்து, பவளம், ஆகியவற்றின் குற்றங் குணங்களும்  பொன்னின் வகைகளும் கனிமவியல் அறிவுக்குச் சான்று பகர்கின்றன.

*நிலத்தின் அடிப்படையில் செம்மண் சுவையின் அடிப்படையில் உவர் நிலம் தன்மையின் அடிப்படையில் களர்நிலம் களிமண்.

*கடற்கரையை ஒட்டியுள்ள உப்புத் தன்மை கொண்ட நிலம் உவர்நிலம்.

* உவர்நிலம் மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்படாது.

“அகல் வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவா உவர் நிலம்” என்று கூறுகிறது புறநானூறு.

* எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைத் திருக்குறள் பயவாக்” களர் அனையர் கல்லாதார்” என்று கூறுகிறது.

*  இதனையே பாவேந்தர் பாரதிதாசன்

“கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் அதில், புல்

விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை” என்கின்றார்.

* மழை உணவைத் தந்து உயிரைக் காப்பதால் இவ்வுலக உயிர்களுக்கு அமிழதமாகிறது.

*  நீரின் இயல்பில் ஒன்று அதனை அழுத்தி செறிவாக அடைக்க முடியாது. ஒரு படியாகி மணலையிட்டுப் பின் குலுக்கி மேலும் சிறிது மணலை அதில் இட முடியும். ஆனால் நீரை அவ்வாறு செய்ய முடியாது. இதனை

“நெடுங்கடலுள் ஆழ அமுக்கி முகக்கினும் நாழி

முகவாது நால் நாழி” என்று ஒளவையார் கூறுகின்றார்.

* “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற திருமூலரின் வாக்கு உடம்பைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

* இவற்றைச் சமன்படுத்தகாய் கனியிலிருந்தே மருந்து கண்டனர் “மருந்தாகித் தப்ப மரத்தற்றால்” என்ற குறளடி இதனை உணர்த்தும்.

* பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவம் ஆயிற்று.

*  உலகில் பின் விளைவுகளற்ற ஒரே மருத்துவம் ஆகும்.

* இயற்கை மருத்துவம் என்ற மருந்தில்லா மருத்துவ முறையும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின் என்ற குறள் (942) தெரிவிக்கிறது.

மணிமேகலையின் தோழியாகிய சுதமதியின்

தந்தையை மாடு முட்டியதால் குடல் சரிய புத்த

துறவி அதனை சரிசெய்ததாக மணிமேகலை கூறுகிறது.

* “இவை அதிகமானால் கனி குறைந்து போகும்”

“விளையும் பயிர் முளையிலே தெரியும்”

*  “அரிவாள் போல் இலைவிடும் கவிமான் போல பூ பூக்கும்.

தின்னப்பழம் பழுக்கும் தின்ணாத காய் காய்க்கும்” – வேம்பு

* “கண்டு காய் காய்க்கும் காணாமல் பூப்பூக்கும்”.

* “வித்தில்லாமல் விளைவது வெட்டாமல் சாய்வது”

*  “ஆடிப்பட்டம் தேடி விதை”

* “மாடுகிடக்குது கயிறு மேயுது” – பூசணிக்காய்ஃ கொடி என்ற பழமொழிகளும் விடுகதைகளும் தமிழரின் தாவரவியல் அறிவினை உணர்த்தும்.

 “அண்ணன் தம்பி மூன்றுபேர் ஒருவன் வீட்டில்

வசிப்பான் ஒருவன் நீரில் வசிப்பான்”

உடும்பு, பல்லி, முதலை “பூனை, மீனை வால்பக்கமிருந்து தான் கடித்துத் தின்னும்”

போன்றன விலங்கியல் அறிவை உணர்த்தும்.

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஒளவை.

 “ஓர் அணுவினைச் சதகூறுஇட்ட கோணினும் உள்ள” – கம்பன்

இவை அணுச்சேர்ப்பு, அணுப்பிரிப்பு பற்றிய அறிவியலை உணர்த்துகிறது.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!