TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ்மொழித்தேர்வு கட்டாயம்!

1
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - தமிழ்மொழித்தேர்வு கட்டாயம்!
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - தமிழ்மொழித்தேர்வு கட்டாயம்!
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ்மொழித்தேர்வு கட்டாயம்!

தமிழகத்தில் TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 , குரூப் 3, குரூப் 4 & VAO போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் TNPSC 2022 ஆண்டுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த ஆண்டு மொத்தம் 22 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் விவரங்கள் பிரிக்கப்படும் போன்ற புதிய மாற்றங்களையும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் மொழிக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையிலும், தமிழக இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கும் நோக்கிலும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழித்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும்.

Join Our TNPSC Coaching Center

குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும். மேலும் குரூப் 4 தேர்வில் தமிழ்மொழித் தேர்வு வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 & VAO தேர்வில் மொத்தம் 5, 225 காலிப்பணியிடங்கள் உள்ளது. இது குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும். அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here