சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ஈஸியா புக் பண்ணுங்க!
இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவைகள் தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி சேவை:
இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவையில் தமிழ் மொழியானது திடீரென நீக்கம் செய்யப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். இது குறித்து பேசிய நாடாளுமன்ற எம்.பி வெங்கடேசன் இந்த நிறுவனத்தின் தானியங்கி சமையல் எரிவாயு முன்பதிவு சேவையில் தமிழ்மொழி இடம் பெறதாது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு மீண்டும் தமிழ் மொழியை சேவை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
TNPSC தமிழ் மொழி தகுதித் தேர்வு – ஈஸியா எதிர்கொள்ள என்ன வழிமுறைகள்?
இது குறித்து தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவத நிறுவன தொலைபேசி எண் நவ.01ம் தேதி முதல் ஏர்டெல்லில் இருந்து ஜியோவுக்கு மாறியதால் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. மேலும் இந்த மாற்றத்தின் காரணமாக ஆங்கிலம் மற்றும் இந்திமொழிகளை தேர்வு செய்யும் வசதி மட்டுமே இருந்தது. தற்போது இந்த பிரச்சனை நீக்கப்பட்டு தமிழ் மொழி முன்பதிவு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.