“இந்த வீட்ல கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு” – பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!

0
"இந்த வீட்ல கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு" - பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!
“இந்த வீட்ல கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு” – பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!

தமிழகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ன் 3 வது ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பிக் பாஸ் சீசன் 5:

இந்தியாவின் பல முக்கிய மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 5ம் சீசனை எட்டியுள்ளது. ஒரு வீட்டில் அறிமுகம் இல்லாத பல்வேறு துறைகளை சேர்ந்த 17 பேர் 100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல், அங்கு கொடுக்கப்படும் சவால்களை சந்திக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தாங்கி 100 நாட்கள் தாக்குப்பிடித்து மக்களின் அதிக வாக்குகளை பெற்ற நபர் இறுதி வெற்றியாளர் ஆக அறிவிக்கப்படுவார். நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு விவகாரம் – அதிகரிக்கும் புகார்கள்!

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு பிக் பாஸ் 4 வழக்கத்தை விட தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டின் சீசன் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதுவரைபிக் பாஸ் சீசன் 5ன் 2 ப்ரோமோக்கள் வெளிவந்துள்ளது. அதில் வழக்கத்தை விட கமல் அதிக கலகலப்பாக உள்ளார். கமலின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பின் நடக்கும் முதல் சீசன் என்பதால் வாத்தியாரின் ரைடுகள் இந்த முறை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், இன்று பிக் பாஸ் சீசன் 5 ன் 3ம் கட்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், வீட்டுக்குள்ள தான கிசுகிசுன்னு பேசுறோம். யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருகாங்க என்று கிசுகிசுப்பான குரலில் பேசுகிறார். உடனே, இன்னொரு குரல், யாருப்பா இது கிசுகிசு ன்னு பேசுறது என்று கேட்பது போல் உள்ளது. உடனே, இந்த வீட்ல கிசுகிசுன்னு கூட பேச முடியாது போல இருக்கே என்று அங்கலாய்த்து கொள்வது போல் உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ரோமோ இன்னும் அதிக ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!