தலிபான் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம் – நிறுவனம் அறிவிப்பு!

0
தலிபான் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம் - நிறுவனம் அறிவிப்பு!
தலிபான் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம் - நிறுவனம் அறிவிப்பு!
தலிபான் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம் – நிறுவனம் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம்:

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதால் அங்கே இருக்கும் பலர் வெளியேறி வருகின்றனர்.

தமிழக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – வெளியீடு!

இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தலிபான்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவிக்க பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கூட சமூக வலைதளங்களில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு காரணம், அமெரிக்க சட்டப்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் உள்ளது. அதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கொள்கையின்படி தலிபான்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கின்றோம். தலிபான்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குவதுடன், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் கணக்குகளும் முடக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here