இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், தாகூர் படங்கள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

0
இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், தாகூர் படங்கள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், தாகூர் படங்கள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், தாகூர் படங்கள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படமே இடம்பெற்றியிருக்கும். இந்த நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளில் தற்போது ரவீந்திர நாத் தாகூர், அப்துல் கலாம் உள்ளிட்டவர்களின் படங்கள் பொறிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி RBI விளக்கம் தெரிவித்துள்ளதை பற்றி பார்ப்போம்.

ரூபாய் நோட்டுகள்:

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் தேசத்தின் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. இந்த நடைமுறை மகாத்மா காந்திஜியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 1969ம் ஆண்டு முதல் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் போன்ற நாணயங்களில் பல்வேறு தலைவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா புதிய வடிவில் ரூபாய் நோட்டுகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி – முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து காந்தியின் புகைப்படத்தோடு ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் மற்றும் விவரங்களை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த உள்ளதாக RBI திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் மாற்ற வேண்டும் என்று தகவல்கள் கசிந்தன. அத்துடன் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் புகைப்படத்தை கொண்ட வாட்டர் மார்க் மூலமாக இரண்டு மாதிரிகளை ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன.

Exams Daily Mobile App Download

இந்த மாதிரிகள் மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரானிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள SPMCIL மில்லிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாதிரிகளில் ஒன்றை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தற்போது ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் புகைப்படத்தை வைத்து இரண்டு மாதிரிகள் டெல்லி ஐஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐஐடியை சேர்ந்த திலீப் ஷகானி இதில் ஒன்றை விரைவில் தேர்வு செய்யம் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பொது மேலாளர் யோகேஷ் டயால் தெரிவித்தாவது, ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திஜிக்கு பதிலாக வேறு படத்தை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here