இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டிகள் – ஒரு அலசல்!

0
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டிகள் - ஒரு அலசல்!
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டிகள் - ஒரு அலசல்!
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டிகள் – ஒரு அலசல்!

ICC 20 ஓவர் ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பல ஆண்டுகளாக பரம எதிரிகளாக திகழ்ந்து வருகின்றன. இப்பதிவில் இரு அணிகள் மோதிய போட்டிகளின் வெற்றி, தோல்விகள் குறித்து விரிவாக காண்போம்.

இந்தியா vs பாகிஸ்தான்:

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் கடந்த ஆண்டு முன்பு வரை 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்று சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது. 1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

2007 முதல் 2016 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 5 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஐந்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான T20 போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் மோதி 7 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மோதிய T20 போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பாக நடந்த ஒன்று 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தான். இதில் மகேந்திர சிங்க் தோனி தலைமையிலான இந்திய அணி இருந்து போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது.

தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!

2019 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற T20 உலக கோப்பை முதல் போட்டியில் முதன்முறையாக இந்திய அணி பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இப்போட்டி இந்திய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ICC உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டை போல இந்த முறையும் பரம எதிரியான இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன. இதனால் இப்போட்டிக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை இந்திய அணி பாகிஸ்தானை வென்று பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!