TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் குரூப் 4 தேர்விற்கான தேர்வு முறை, கால அவகாசம், மதிப்பெண்கள், பாடத்திட்டம் குறித்தான அனைத்து விவரங்களையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 4:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலான தகுதி தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், குரூப் -4 தேர்வின் மூலமாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணிகள் மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விஏஓ பணிக்கு 274 காலிப் பணியிடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 3681 காலிப் பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 2108 காலிப் பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 1024 காலிப் பணியிடங்களும், வீட்டு வசதி வாரியம் நகர்ப்புற வாழ்வில் மேம்பாட்டு வாரியம் ஜூனியர் அசிஸ்டென்ட் பில் கலெக்டர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 163 காலிப் பணியிடங்களும் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியில் இணையும் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி!

குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு மற்றும் புத்திகூர்மை பகுதிகளில் இருந்து 25 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். மொத்தமாக 200 மதிப்பெண்ணுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் வழங்கப்படுகிறது. தற்போது எந்தெந்த பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்பதற்கான முழு விவரங்களையும் காணலாம். அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் இருந்து வினாக்களும், நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் இருந்து வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் பகுதிகளில் இருந்து வினாக்களும் கேட்கப்படும்.

மேலும், புவியியல் பாடத்திட்டத்தில் இருந்து புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் பகுதிகளில் இருந்து வினாக்களும், வரலாறு பாடத்திட்டத்தில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு பகுதிகளில் இருந்து வினாக்களும், இந்திய அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் பகுதிகளில் இருந்து வினாக்களும இடம்பெறும்.

Exams Daily Mobile App Download

மேலும், பொருளாதாரம் பாடத்திட்டத்தில் இருந்து ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி பகுதிகளில் இருந்து வினாக்களும், இந்திய தேசிய இயக்கம் பாடத்திட்டத்தில் இருந்து தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு பகுதிகளில் இருந்து வினாக்களும், திறனறி வினாக்கள் பாடத்திட்டத்தில் இருந்து தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) பகுதிகளில் இருந்து வினாக்களும் இடம்பெறும். மேலும், குரூப் 4 தேர்வெழுதும் தேர்வாளர்கள் பாடத்திட்டங்களை https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்கிற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!