TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு!
TNPSC குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் தற்போது திருக்குறள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இதனை பார்த்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
குரூப் 2 தேர்வு:
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. அண்மையில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.TNPSC தேர்வில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை – ஜன.15ம் தேதி வரை நீட்டிப்பு!
இந்த குரூப் 2 தேர்வில் 2022ம் ஆண்டில் 5,000+ காலியிடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 2 தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவை சேர்த்த திருத்தப்பட்ட பாடத்திட்டம் அண்மையில் TNPSC தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 தேர்வில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது.
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!
கடந்த 2019 ம் ஆண்டு வெளியிடப்பட்ட குரூப் 2 பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம் பெற்றிருந்தது. ஆனால் 2021ம் ஆண்டு வெளியான பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில் தற்போது திருக்குறள் பாடம் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட குரூப் 2 பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.