பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் – கல்வி நிபுணர்கள் அதிருப்தி!

0
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் - கல்வி நிபுணர்கள் அதிருப்தி!
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் - கல்வி நிபுணர்கள் அதிருப்தி!
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் – கல்வி நிபுணர்கள் அதிருப்தி!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் நிகழ்வு கல்வி நிபுணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாடத்திட்டங்கள் மாற்றம்

தற்போது ஹரியானா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பாடப்புத்தகங்களை மாற்றியமைத்த பழைய விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது, இம்மாநில அரசுகளின் பாடத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் சில தகவல்களை பாஜக அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துள்ளனர். இது ஒரு ஆபத்தான போக்கு என்று வரலாற்றாசிரியர்களும் கல்வி நிபுணர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் ஹரியானா அரசாங்கத்தில், 9 ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் காங்கிரஸின் “மனநிறைவுக் கொள்கை” பற்றிய பத்திகள் பாஜக அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.

திருப்பதி போல் இனி திருச்செந்தூரிலும் புதிய வசதிகள் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

அதே போல கர்நாடகா RSS நிறுவனர் கே.பியின் உரை தற்போது 10 ஆம் வகுப்பு உரையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத் அரசாங்கத்தின் 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பகவத் கீதையின் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க பல்வேறு மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட இந்த தொடர்ச்சியான முடிவுகள், அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு பள்ளி நூல்களை மாற்றம் செய்யும் விவாதத்தின் மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கு முன்னதாக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் “கல்வியை காவி நிறமாக்கும்” முயற்சியாக பாடப்புத்தகங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய வரலாற்றாசிரியர்களால் விமர்சிக்கப்பட்டது.

அந்த வகையில் பாடப்புத்தகங்களில் முகலாய வரலாற்றில் அதிக கவனம் செலுத்தியதற்காகவும், “இந்து ஆட்சியாளர்கள்” பற்றிய தகவல்களை விட்டுவிட்டு, “வரலாற்றில் இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் பங்களிப்பு” ஏற்படுத்தியது தொடர்பாகவும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில் ராஜஸ்தானில், இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடப்புத்தகங்கள் மாறும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி இருக்கும் நிலையில் பாடப்புத்தகங்களை கருத்தியல் போர்க்களங்களாக மாற்ற முடியாது என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!