TNPSC Group 4, VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தயாராகும் முறை!

0
TNPSC Group 4, VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தயாராகும் முறை!
TNPSC Group 4, VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தயாராகும் முறை!
TNPSC Group 4, VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தயாராகும் முறை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான அரசின் துறைகளில் காலியாக உள்ள பணிகளுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தயாராகும் முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

TNPSC குரூப் 4:

தமிழக அரசின் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) போன்ற பணிகளுக்கான நியமனம் ஆனது குரூப் 4 தேர்வின் மூலம் செய்யப்படுகிறது. இந்த பணிக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேரடியான பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது நடப்பு ஆண்டில் மொத்தம் 7382 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

இந்த தேர்வானது வரும் ஜூலை 24ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்விற்கு மொத்தம் 21 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதனால் போட்டி அதிக அளவில் உள்ளது. தேர்வில் 2 பகுதிகள் முறையே பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு என்று உள்ளது. தமிழ் மொழித்தாள் ஆனது தற்போது தகுதித்தாள் ஆக உள்ளது. இதில் 40 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே உங்கள் தாளின் அடுத்த பகுதி மதிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிப்பாடப்பிரிவில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

Exams Daily Mobile App Download

அடுத்த பகுதியில் 75-பொது அறிவு வினாக்களும், 25-திறனறித்தேர்வு (Aptitude Test) வினாக்களும் கேட்கப்படும். 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை முழுவதுமாக படித்து முடித்தாலே போதுமானது ஆகும். அதன் பிறகு நேரம் இருந்தால் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களை படித்துக் கொள்ளலாம். மேலும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் நடப்பு நிகழ்வுகள் குறித்தும் படித்துக் கொள்ள வேண்டும். கணிதப்பகுதியை தினமும் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு படிப்பதால் தேர்வின் இறுதி நேரத்தில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!