ATP தரவரிசை: ஸ்வரெவ் 4 ஆம் இடத்துக்கு முன்னேற்றம் – 5வது இடத்தில் நடால்!

0
ATP தரவரிசை: ஸ்வரெவ் 4 ஆம் இடத்துக்கு முன்னேற்றம் - 5வது இடத்தில் நடால்!
ATP தரவரிசை: ஸ்வரெவ் 4 ஆம் இடத்துக்கு முன்னேற்றம் - 5வது இடத்தில் நடால்!
ATP தரவரிசை: ஸ்வரெவ் 4 ஆம் இடத்துக்கு முன்னேற்றம் – 5வது இடத்தில் நடால்!

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பட்டத்தை வென்றதன் மூலம் டென்னிஸ் வல்லுநர்களின் தரவரிசை பட்டியலில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் உலகத்தர டென்னிஸ் வீரரான நடால் 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தரவரிசை பட்டியல்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 24 வயதான டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் 2018 ATP இறுதிப் போட்டியில் ஒற்றையர் சாம்பியனாக இருந்துள்ளார். ஸ்வரெவ் இதுவரை ஒற்றையர் பிரிவில் 17 ATP பட்டங்களையும், இரட்டையரில் 2 பட்டங்களையும் வென்றுள்ளார்.

தமிழக அரசு வழங்கும் 1000 ரூபாய் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட அவர் மீண்டுமாக பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ATP தரவரிசையில் 5 ஆம் இடத்தில் இருந்த அவர் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் 4 ஆம் இடத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் 5 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் காயம் காரணமாக விலகிய ரஃபேல் நடால், தொடர்ந்து US ஓப்பன் டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் US ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் மற்றும் ரோஜர் பெடரர் இருவரும் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் US ஓப்பன் டென்னிஸில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினால் 24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரெவ், தரவரிசையில் இன்னும் மேலே உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே ATP தரவரிசையில் செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் 11,113 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் 9,980 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் மற்றும் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ் 8,350 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர். தற்போது 8,240 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் ஸ்வரெவ்வும், நடால் 7,815 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்திலும் உள்ளனர். மேலும் US ஓப்பன் டென்னிஸில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4,125 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!