தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஓர் அரிய வாய்ப்பு!

0
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஓர் அரிய வாய்ப்பு!
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஓர் அரிய வாய்ப்பு!
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஓர் அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் 12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் “SVEEP Contest 2022” என்ற தலைப்பில் 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் உட்பட அனைவரும் பங்கு பெறலாம்.

தேசிய வாக்காளர் தினம்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் வாக்களிப்பதை கடமையாக கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான பொருட்கள் விநியோகம்! அமைச்சர் அறிவுறுத்தல்!

இந்த ஆண்டு 12வது தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடபடுகிறது. மேலும் “SVEEP Contest 2022” என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்போட்டியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஆகியவை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலமாக நடத்தப்படுகிறது.

TCS நிறுவனத்தில் ரூ.4.2 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் 15 போட்டியாளர்களின் விவரம் வருகிற 31 ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தியான பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ, மாணவிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக “ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெறலாம். மேலும் 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகள் அவர்கள் குடும்பத்தில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தி பங்கேற்கலாம். இப்போட்டிகள் அனைத்தும் வருகிற 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அத்துடன் கீழ்க்கண்ட 6 தலைப்புகளில் இப்போட்டிகள் நடைபெறுகிறது.

  1. ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம்
  2. 100 சதவீத வாக்காளராக பதிவு செய்தல்
  3. வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி
  4. தூண்டுதல் இல்லாமல் வாக்களித்தல்
  5. வயது வந்தோர் வாக்காளராக பங்கெடுப்பு
  6. ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!