தமிழகத்தில் பள்ளியில் சேராத குழந்தைகள் கணக்கெடுப்பு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளியில் சேராத குழந்தைகள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
குழந்தைகள் கணக்கெடுப்பு:
தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் கிராம மற்றும் நகர் பகுதிகளிலும் உள்ள மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் மேல்நிலை கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் வருடம் தோறும் பள்ளியில் சேராத மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு கல்வி கற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி – உங்கள் தகுதியை சரிபார்ப்பது எப்படி?
6 முதல் 17 வயதுள்ள மாணவர்கள் வரை பள்ளியில் சேராத குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தை தொழிலாளர்கள் போன்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இவர்களை பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளியில் சேராத குழந்தைகள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்த, பள்ளி கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கிற்கு முன்பு கணகெடுப்பு நடைபெற்றது.
TN Job “FB
Group” Join Now
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பள்ளியில் சேர்ந்து படிக்காத, 210 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு அவர்கள் அனைவரையும் பள்ளிகளில் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவலால் முழுமையான கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை, முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் பொள்ளாச்சி பகுதியில் கிராமங்கள், பழங்குடியினரின் குடியிருப்புகளிலும், செங்கல் சூளைகளிலும் கணக்கெடுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ளன.