உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா – ஜனாதிபதி நியமனம்!!

0
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா - ஜனாதிபதி நியமனம்!!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா - ஜனாதிபதி நியமனம்!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா – ஜனாதிபதி நியமனம்!!

நீதிபதி என்.வி.ரமணா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஓய்வு பெறவிருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி என்.வி.ரமணாவை பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி:

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் என்.வி.ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி அவர் பதவியேற்பார். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.போப்டே ஓய்வு பெற உள்ள நிலையில், நீதிபதி ரமணாவை அவர் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

ஆகஸ்ட் 27, 1957 அன்று ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 2022 ஆகஸ்ட் 26 வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார் என கூறப்பட்டு உள்ளது. அவர் ஆந்திராவைச் சேர்ந்த இந்தியாவின் 2வது தலைமை நீதிபதியாக இருப்பார். இதற்கு முன்னர் நீதிபதி கே சுப்பா ராவ் 1966-67 வரை இந்தியாவின் ஒன்பதாவது தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

TN Job “FB  Group” Join Now

நீதிபதி ரமணா ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் நிலவரங்களில் பயிற்சி பெற்றுள்ளார். அவர் “ஜூன் 27, 2000 அன்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 மார்ச் 10 முதல் 2013 மே 20 வரை செயல்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!!

அவர் 2013 ல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014 ல் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பதவி உயர்த்தப்பட்டார். 63 வயதான நீதிபதி ரமணா, ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவையை நிறுத்தி வைப்பதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் வருகிறது என்று கூறிய நீதிபதிகள் குழுவிலும் அவர் இருந்தார்.

தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

வரலாற்று அயோத்தி தீர்ப்பு உட்பட பல முக்கிய வழக்குகளில் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி போப்டே, 2019 நவம்பரில் இந்திய 47 வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார், அவர் ஓய்வு பெற்ற பின் நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்றார்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here